டொரியான் என்பது ஒரு பழம். தென் கிழக்காசியாவின் சில பகுதிகளிம் மட்டுமே காணப்படும். "டூரி" என்ற மலாய்மொழிச்சொல் முள்ளைக் குறிப்பதாகும்.அந்தப் பழம் கடினமான ஒட்டால் போர்த்தப்பட்டது. ஓட்டில் கூரிய, கடினமான முட்கள் நெருக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும்.பழக்கமில்லாதவர்கள் பழத்தைத் தூக்கிவிட முடியாது. முள்ளால் மூடப்பட்ட பழமாகையால் இது "டூரியன்" என்று பெயர் பெற்றது. தமிழர்கள் அதனை டொரியான் அல்லது டொரியாம்பழம் என்று சொல்வார்கள்.
ஓட்டைப் பிளப்பதுவும் கஷ்டம். தெரிந்தவர்கள் மட்டுமே செய்யமுடியும். ஒரு சில மர்மஸ்தானங்கள் பழத்தில் உண்டு. அங்கு கீறி, கூரிய கட்டையால் வகுந்து, நெம்பவேண்டும். இதையெல்லாம் செய்யும்போது தடித்த துணியை பலவாக மடித்து, பழத்தைப் பிடிக்கவேண்டும்.பழத்தைப் பிளக்க வேண்டும்.உள்ளே கூடுகளாய் அமைந்திருக்கும். அந்த கூடுகளில் மூன்று சுளைகள் வீதம் இருக்கும். கனமான கொட்டையுண்டு.
சதையை மட்டுமே உண்ணவேண்டும்.பழத்தை உடைத்தவுடன் சுளையைச் சாப்பிடுவதே நல்லது. கொஞ்சம் நேரமானாலும் நசுநசுத்துவிடும். இந்த உலகிலேயே வேறெதற்குமே ஒப்பிட முடியாதமாதிரி வாசம்(சிலருக்கு வீச்சம்; சிலருக்கோ நாற்றம்) அந்தச் சுளைகளுக்கு உண்டு. அதது அவரவர் டேஸ்ட்டைப் பொறுத்தது. சில வெள்ளைக்காரிகள் மயக்கம் போட்டு விழுவதும் உண்டு.
சதை இனிப்பாகவும் ஒரு குறிப்பிட்ட flavourஉடனும் விளங்கும். இதுவும் ஒப்புக்கோ உவமைக்கோ அப்பாற்பட்டது.ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் - நிருபமா. 'நிர் உபமா' - உவமைக்கு அப்பாற்பட்டவள். அதுபோல.
No comments:
Post a Comment